சென்னை: மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்துகிறார், அவருடைய கடிதத்தை புறந்தள்ளுங்கள் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில் மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
மதிமுகவில் பெரியவர்களுக்கு மரியாதை தருகிறோம். எனவே அவருடைய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறந்தள்ளுங்கள் என துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.