SBI குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி? இதோ வழிமுறை

ஒரு மொபைல் இருந்தால்போதும் உங்கள் வங்கி சேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதில் ஒரு மிஸ்டு கால் அல்லது மெசேஜ் செய்தாலே உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை வங்கிகள் உருவாக்கி வைத்துள்ளன. அதிலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டுகால் கொடுத்து வங்கி பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெற்றுக் கொள்ளலாம்.  

இந்த சேவை SBI Quick Missed Call Banking Service என அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ், எஸ்பிஐ வங்கியின் சேவை எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் அல்லது SMS அனுப்புவதன் மூலம் வங்கிச் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆன்லைன் அப்ளிகேஷன், இருப்புத் தொகை விவரம், மினி ஸ்டேட்மெண்ட், ஏடிஎம் கார்டு பிளாக்கிங், கார் லோன் அம்சங்கள் மற்றும் PM சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல வசதிகளை எஸ்பிஐ வழங்குகிறது. இத்தனை சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும். இதுதவிர வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடனுக்கான வட்டிச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம். 

எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி?

எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவையைப் பயன்படுத்த உங்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணுக்கு ‘REG account number’ என டைப் செய்து SMS அனுப்பவும். அதன்பிறகு இந்த சேவை ஆக்டிவேட் ஆகும். இருப்பு தொகையை சரிபார்க்க விரும்பினால், மேலே கொடுக்கபட்டுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் அல்லது 09223766666 என்ற எண்ணிற்கு “BAL” என SMS அனுப்பவும்.

மினி ஸ்டேட்மென்ட் முதல்  லோன் சேவை வரை

மினி ஸ்டேட்மெண்ட் பெற, 9223866666 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் அல்லது “MSTMT” என SMS அனுப்பவும். ஏடிஎம் கார்டைத் பிளாக் செய்ய 567676 என்ற எண்ணிற்கு “BlockXXXX” என எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதில், XXXX என்பது உங்கள் கார்டு எண்ணின் கடைசி 4 இலக்கங்களைக் குறிக்கிறது. கார் அல்லது வீட்டுக் கடன் பற்றி விசாரிக்க, “Car” அல்லது “Home” என 567676 அல்லது 09223588888 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். SBI எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை மூலம் கிடைக்கும் சேவைகளின் முழுமையான பட்டியலைப் பார்க்க, “HOME” என 09223588888 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தச் சேவைகளைப் வங்கியில் பதிவ செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.