போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ்; மல்யுத்த சம்மேளன தலைவர் | Wont Resign, Says Wrestling Body Chief After Police Case: 10 Points

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது எனக்குற்றம்சாட்டி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங், தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன் எனக்கூறியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தரில் பெண் வீராங்கனைகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக அவர் கூறியதாவது: நான் அப்பாவி. விசாரணை அமைப்புகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து மாறிக்கொண்டுள்ளது. முதலில் என்னை பதவி விலக சொன்னார்கள். பதவி விலகுவது என்றால், என் மீதான குற்றச்சாட்டை ஒப்பு கொள்வதற்கு சமம்.

latest tamil news

ராஜினாமா பெரிய விஷயமல்ல. ஆனால், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் எம்.பி., மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரு குடும்பத்தினர் என் மீது கோபத்தில் உள்ளனர். போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது. அரசியல் ரீதியில் போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.