மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பின்புலத்தில் காங்கிரஸ் கட்சியும், சில தொழிலதிபர்களும் இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதனிடையே, பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், போராட்டத்திற்கு முன்பு வரை அவர்கள் தன்னை புகழ்ந்து பேசி வந்ததாகவும் கூறினார்.
தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த பிரிஜ் பூஷண், வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயார் எனக் கூறினார்.