பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் தனது வீட்டின் அருகே பெற்றோருடன் வசித்து வரும் 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குன்னம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு போலீசார் சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியின் அடைத்தனர்.