இந்தோனேஷியாவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.
இந்தோனேஷியாவின் ரியாவ் மாகாணத்தில் உள்ள டெம்பிலாஹன் துறைமுகத்தில் இருந்து நேற்று ஆறு பணியாளர்கள், 68 பயணியருடன் படகு ஒன்று தஞ்சுங் பினாங்கிற்கு சென்றது.
ரம்ஜான் விடுமுறையை முடித்துவிட்டு குடும்பத்துடன் பலர் பயணித்தனர். படகு பலத்த காற்றில் சிக்கி கவிழ்ந்து கடலில் மூழ்கியது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பெண்கள் குழந்தைகள் என 11 உடல்களை மீட்டனர்; 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
படகில் பயணித்த ஒருவர் மட்டும் மாயமாகி உள்ளதால் அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
படகுகளில் அளவுக்கதிகமான பயணியரை ஏற்றி செல்வதால்
இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement