பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 2011 முதல் 2023 ஆண்டு வரை சுமார் 28000 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை பெற்றிருக்கும் இந்த நிறுவனம் அந்நிய செலாவணி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 9754 கோடி டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. […]