மாம்பழங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவும், சந்தைப்படுத்தவும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு எருத்தேன்பதியில், மாம்பழ மகோற்சவம் நடக்கிறது.
மகளிர் விவசாயிக்கான அரசு விருது பெற்ற, பிளசி ஜார்ஜின் தலைமையில் ஒயிஸ்கா இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தில் ஒத்துழைப்புடன், மாம்பழ மகோற்சவம் நடக்கிறது.
இதில் பங்கேற்றவர்கள், பல மாம்பழ ரகங்களை கண்டும், ருசித்தும் மகிழ்ந்தனர். பலவகை மாம்பழங்கள் குறித்தும், பயிற்சி வகுப்பு குறித்தும், அறுசுவை குறித்தும், மகோற்சவ அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
மா மற்றும் பழ நாற்றுகள், கலப்பினங்கள் மற்றும் ஒட்டுதல் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்த பழங்கள், காய்கறி நாற்றுகள், நாற்று நடும் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சாதனை படைத்த விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகளின் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மகோற்சவ விழா இன்று நிறைவு பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement