உயிரணு தானம் செய்யும் ஒருவர், விதிகளை மீறி 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தானம் செய்யத் தடை
நெதர்லாந்து நாட்டவரான ஜோனதன் (Jonathan Meijer, 41) உயிரணு தானம் செய்வபர். ஆனால், ஒருவர் அதிகபட்சம் 12 தாய்மார்களுக்கு உயிரணு தானம் செய்யலாம்.
25 பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையாகலாம் என விதி உள்ளது.
ஜோனதனோ, இதுவரை 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக கருதப்படுகிறது.
ஆகவே, இனி உயிரணு தானம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி உயிரணு தானம் செய்தால், ஜோனதனுக்கு 88,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Jonathan Jacob Meijer, in a screenshot from his YouTube channel
விதிகளை மீறி 550 குழந்தைகளுக்குத் தந்தையானது எப்படி?
ஜோனதன், நெதர்லாந்தில் வெவ்வேறு செயற்கை கருவூட்டல் மையங்களில் உயிரணு தானம் செய்துள்ளது 2017ஆம் ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதே அவர் 102 பிள்ளைகளுக்குத் தந்தையாகியிருந்தார். ஆகவே, உயிரணு தானம் செய்ய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஜோனதன் தன் நாட்டில் உயிரணு தானம் செய்வதை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் தானம் செய்யத் துவங்கியுள்ளார்.
Image: Getty Images
இப்படி ஏராளம் பேருக்கு உயிரணு தானம் செய்வதில் பிரச்சினை என்னவென்றால், வெளிநாடுகளில், தங்கள் உறவினர்களை DNA சோதனை மூலம் தேடும் வழக்கம் உள்ளது.
நாளை ஜோனதனுடைய உயிரணு தானம் மூலம் பிறந்த குழந்தைகள் DNA சோதனை செய்துகொண்டால், தங்களுக்கு நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவரும்.
இதை அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது என்பதால், அது அவர்களுக்கு மனோரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.