ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ரிலையன்ஸ் நிறுவனம் 2.5GB திட்டங்களை அதிக அளவு வழங்கும் டெலிகாம் நிறுவனம் ஆகும். இந்த திட்டங்கள் அனைவருக்கும் ஏற்ற திடமாக இருக்காது. காரணம் ஒரு நாளைக்கு அதிகப்படியான டேட்டா தேவைப்படும் நபர்கள் மட்டுமே இந்த திட்டங்களை பயன்படுத்துவார்கள்.
அதில் Jio பொறுத்தவரை நான்கு 2.5GB டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் வீட்டில் இருந்தே OTT மூலம் திரைப்படங்களை பார்க்க இதுபோன்ற திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.
2,999 ரூபாய் திட்டம்
356 நாட்கள் + 23 நாட்கள் என இருக்கும் இந்த திட்டம் 2,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா, கூடுதலாக 75GB டேட்டா, 100SMS வசதி, அன்லிமிடெட் காலிங், JIoTV, JioCinema, JioCloud, JioSecurity போன்ற பல வசதிகள் கூடுதலாக நமக்கு கிடைக்கும்.
2023 ரூபாய் திட்டம்
இந்த திட்டம் 252 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதில் 2.5GB டேட்டா உடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS, JioTV, JioCinema, JioSecurity, JioCloud ஆகிய வசதிகள் கூடுதலாக கிடைக்கும்.
Jio Cinemaவில் இப்போ உலகின் சிறந்த திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்க்கலாம்! ஐபில் 2023 போட்டிகளோடு நிற்கப்போவதில்லை!
899 ரூபாய் திட்டம்
இந்த திட்டம் மூலமாக 90 நாட்கள் வேலிடிட்டி, 100SMS வசதி, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், Jio TV, Jio Cinema, Jio Cloud, Jio Security போன்ற வசதிகள் கிடைக்கும்.
Airtel OTT திட்டங்கள் புதிதாக அறிமுகம்! 5G வேகத்தில் அமேசான், டிஸ்னி பார்க்கலாம்!
349 ரூபாய் திட்டம்
இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ரூ நாளைக்கு 2.5GB டேட்டா உடன் சேர்த்து, 100SMS வசதி, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் போன்ற வசதிகளும் உள்ளன. நீண்ட நாட்கள் வேண்டாம் என்று யாராவது நினைத்தால் இந்த திட்டம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்