Ponniyin Selvan 2: நந்தினி அக்கா… அவிங்கள முடிச்சுறு.. வைரலாகும் பாண்டியர்களின் பேனர்!

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகம் அதையும் மிஞ்சி விட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Trisha: மணிரத்னத்துடன் மறக்க முடியாத த்ரிஷாவின் தருணங்கள்… அவரே ஷேர் செய்த போட்டோஸ்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் இருந்தும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. சோழர்களின் வரலாற்றை பேசும் பொன்னியின் செல்வன் படத்தில் பாண்டியர்கள் ஆபத்துதவிகள் வில்லன்களாக காட்டப்பட்டுள்ளனர். முதலாம் வீரபாண்டியனின் தலையை வெட்டிய ஆதித்த கரிகாலனை கொலை செய்யும் நோக்கத்தில் உள்ள பாண்டியர்களுக்கு நந்தினியும் உதவியாக இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானபோதே மதுரையில் உள்ள ரசிகர்கள் பலர் ‘பகை மறவா பாண்டியர்களின் வாரிசுகள்” என்ற பெயரில் வைக்கப்பட்ட பேனர்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் பகை மறவா பாண்டிய ஆபத்துதவிகள் என வைக்கப்பட்டுள்ள பேனர்கள் வைரலாகி வருகின்றன.

Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த பேனரில் “ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா.. பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே… கடைசி ஆயுதமே… உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருளாசியோட நம்மலயே சீண்டி பார்த்த சோழர்கள் இனிமேல் நம்ம பக்கம் தலை வெச்சு படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சிறு” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

பகை மறவா பாண்டியர்களின் வாரிசுகள் என்ற இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதனை பலரும் சிரிப்பு ஈமோஜிகளுடன் ஷேர் செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? மகுடம் சூடியது யார் என்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது.

Ponniyin Selvan 2: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்… பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கான காரணங்கள்!

மேலும் நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராய் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ஊமை ராணி மந்தாகினியாகவும் தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. காதல் காட்சிகள், ஆக்ரோஷம் கோபம் தாபம் என அனைத்து இடங்களிலும் ஐஸ்வர்யா ராய் ஸ்கோர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.