லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கல்வி துறை வேமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பள்ளி கல்வி துறையை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் அறிவிக்ப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டங்களை செயல்படுத்த தீவிரம் காட்டப்பட்டு வருவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலமான உத்தரப் பிரதேத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று பின்னர் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்திருக்கிறது. மட்டுமல்லாது இடை நிற்றலும் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்னை உத்தரப் பிரதுசத்தின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ள மாநில அரசு மீண்டும் மாணவர் சேர்க்கையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி கல்வி எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்தந்த மாநிலத்திற்கும் மாணவர்களின் நலன் முக்கியம். ஏனெனில் மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். எனவே எதிர்காலத்தை சரியாக கட்டமைக்க வேண்டியது மாநிலங்களின் கடமை. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் அடிப்படை கல்வியை மேம்படுத்த மாநில அரசு வழக்கத்தை விட அதிக அளவில் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
காரணம் கொரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. எனவே இதனை பழைய நிலைமைக்கு கொண்டுவர கூடுதல் முயற்சி அவசியமாகிறது. எனவே இதற்காகதான் கூடுதலாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அரசின் திட்டத்தின்படி ஒவ்வொரு கிராமத்திற்கும் ஆசிரியர்கள் குழு சென்று ஆய்வை மேற்கொள்ளும். பள்ளி வயதை எட்டிய பின்னரும் பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் கலந்தாலோசனை கூட்டம் போடபப்டும்.
இதன் மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிகும். அதேபோல மற்றொரு விஷயம், இடைநிற்றல். கொரோனா தொற்றுக்கு முந்தய காலத்திலும் இடைநிற்றல் இருந்தது. ஆனால் இது மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தது. தற்போது இது இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. எனவே இடைநின்ற மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் சந்திக்க மற்றொரு ஆசிரியர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும். இந்த இரண்டு சிக்கல்களையும் கடந்து மூன்றாவதாக ஒரு சிக்கல் இருக்கிறது.
பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புதான் இந்த மூன்றாவது சிக்கல். பலவீனமான பள்ளி கட்டிடங்கள் மற்றும் எந்தெந்த பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளி கட்டிடங்களையும், பழைய கட்டிடங்களை புனரமைக்கும் பணியையும் அரசு செய்து வருகிறது” என்று கூறியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி கல்வி துறையில் பெரும் மாற்றம் ஏற்பட இருக்கிறது. சுமார் 750 கோடி தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.