ஜெயலலிதாவை தான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன் – த்ரிஷா ஓபன் டாக்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் த்ரிஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : இந்த படத்தில் நான் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு உதாரணமாக மணிரத்னம் என்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள கூறினார். ஜெயலலிதாவின் நடை, பேச்சு நிர்வாக திறன் போன்ற தன்மைகளை எடுத்து கொண்டேன். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் முகத்தில் காட்டி கொள்ளாமல் இருப்பார் ஜெயலலிதா. அது தான் குந்தவை கதாபாத்திரத்தின் குணாதிசயம். அந்த தன்மையும் முன் உதாரணமாக எடுத்து கொண்டதாக த்ரிஷா கூறினார்.