ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகளில் பெற்றோர் பூட்டு போடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிணங்களோடு உடலுறவு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவதன் காரணமாக பெற்றோர்கள் இத்தகையை முடிவுகளை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் மூதாட்டி உயிரிழப்பு!
நெக்ரோபிலியா
உயிரிழந்தபின் பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா (necrophilia) என அழைக்கும் வழக்கம் உள்ளது. இத்தகைய மனநிலை உள்ளவர்களுக்கு பிணங்களை கண்ட பின் பாலுணர்வு தூண்டப்படும். அதன் காரணமாக கொலை செய்தோ அல்லது புதைக்கப்பட்ட சடலத்தை வெளியில் எடுத்தோ அதை வன்புணர்வு செய்வது இவர்களின் வழக்கமாக உள்ளது.
வெளிநாடுகளில் மட்டுமே இத்தகைய மனநிலை கொண்டவர்களின் செய்திகள் வெளிவந்த நிலையில், தமிழகத்திலும் இதேபோன்ற பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் நபரை விழுப்புரம் போலீசார் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்தனர். இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருவெண்ணைநெல்லூர் அருகில் இருந்த கவிதாஸ் என்ற நபரை கைது செய்தனர். இந்த நபர் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்துவிட்டு, அந்த சடலத்துடன் உடலுறவு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.
அவலம்
இந்தநிலையில் பாகிஸ்தானிலும் இதே மனநிலை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இறந்த மகள்களின் கல்லறைகளை பெற்றோர்கள் பூட்டி வைக்கும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வு கூறுகிறது. அதனால், பெண்களின் கல்லறையில் பூட்டுகள் போடப்பட்டிருப்பது நெஞ்சை பதற வைக்கும் காட்சியாக உள்ளது.
Radha Iyengar: ‘அமெரிக்க வரலாற்றில் கோலோச்சும் இந்திய பெண்’.. யார் இவர்.?
இஸ்லாம் மதத்தில் இருந்து ஏன் வெளியேறினேன் என்ற புத்தகத்தை எழுதியவரும், இஸ்லாம் மதத்தில் உள்ள பிற்போக்குத்தனங்களை கடுமையாக எதிர்த்தவருமான ஹாரிஸ் சுல்தான் இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘‘பாலியல் அழுத்தம் அதிகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. காம கொடூரன்களிடம் இருந்து இறந்து போன தங்கள் பெண்களை காக்க பெண்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.
48 பேர்
கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானில் நெக்ரோபிலியா வழக்குகள் வெளிவரத் தொடங்கின. கராச்சியில் உள்ள வடக்கு நிஜாமாபாத்தில் உள்ள கல்லறை காப்பாளர் முகம்மது ரிஸ்வான் 48 பெண் உடல்களை தோண்டி எடுத்து வன்புணர்வு செய்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட 18 வயது பெண் கோடாரியால் கொல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி வெளியானது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, நாட்டில் உள்ள 40% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.