வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவலை மே.8-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. பல முறை விசாரணை நடத்தி கடந்த பிப்.26-ல் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடியானது.
இந்நிலையில் மதுபான கொள்கை விவகாரத்தில் நடந்துள்ள பண மோசடி தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இன்று(ஏப்.,29 ம் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை மே. 8-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி எம்.கே. நக்பால் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement