சமீபத்தில், மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஜேர்மனியின் பிரபல பத்திரிகையாகிய ‘Der Spiegel’, இந்தியாவை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தியாவை அவமதித்த ஜேர்மனிக்கு பதிலடி
அதில், பழங்காலத்து ரயில் ஒன்றில் மக்கள் கூட்டமாக இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு பயணிப்பது போலவும், அதன் அருகே தொழில்நுட்பத்தில் முன்னேறிய சீன ரயில் ஒன்று பின்தங்கி பயணிப்பதுபோலவும் ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.
அப்போது, இந்திய மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான திரு ராஜீவ் சந்திரசேகர் அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார்.
அந்த ட்வீட்டில், இந்தியாவை நீங்கள் அவமதிக்க முயன்றாலும், இந்தியாவுடன் போட்டிபோடுவது புத்திசாலித்தனம் அல்ல, இன்னும் சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஜேர்மனியை மிஞ்சிவிடும் என்று கூறியிருந்தார்.
Image: Alekk Pires/Shutterstock
2024இல் ஜேர்மனியை முந்திவிடுவோம்
இந்நிலையில், இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதியான Anil Chauhan, 2024இல் இந்தியா ஜேர்மனியை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகிவிடும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டில் பிரான்சை பின்னுக்குத்தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா.
2022இல், பிரித்தானியாவை முந்தி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடானது.
தற்போது, உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் ஜேர்மனி உள்ள நிலையில், 2024இல் இந்தியா ஜேர்மனியை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகிவிடும் என நம்புவதாக Anil Chauhan தெரிவித்துள்ளார்.