இந்தியாவில் சீன படையுடனான மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவ அதிகாரியாகியுள்ளார்.
இந்தியா – சீனா படைகள் மோதல்
கடந்த 2020ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய, சீன படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக் கொண்டன. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அதில் ஒருவரான தீபக் சிங் என்பவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தீபக்கின் மனைவி ரேகாவுக்கு ராணுவ அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Image: Agencies
ராணுவ வீரரின் மனைவிக்கு பொறுப்பு
இவர் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டவர் ஆவார். தற்போது ரேகா கிழக்கு லடாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சண்டையில் வீர மரணம் அடைந்த வீரரின் மனைவி ராணுவத்தில் அதிகாரியாக தெரிவான விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Twitter: ADG PI-INDIAN ARMY/@adgpi