ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ரிலீசாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன்னியின் செல்வன் 2’பொன்னியின் செல்வன் 2′ படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இதன் முதல் பாகம் வெளியாகியிருந்தது. பிரம்மாண்டமாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.
மணிரத்னம்கல்கியின் பிரபலமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் மணிரத்னம். தமிழ் சினிமாவில் பலரும் இந்த நாவலை படமாக்க முயற்சி செய்த நிலையில் மணிரத்னம் அதனை தற்போது சாத்தியப்படுத்தியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். நேற்றைய தினம் வெளியாகியுள்ள இதன் இரண்டாம் பாகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆதித்ய கரிகாலன் – நந்தினி’பொன்னியின் செல்வன் 2′ படத்தின் ஹைலைட்டாக விக்ரம், நந்தினி கதாபாத்திரங்கள் பேசப்பட்டு வருகிறது. விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்துள்ளனர். இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் இரண்டு பேரின் காதல் காட்சிகளும் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
வந்தியத்தேவன் – குந்தவைஅதே போல் கார்த்தி, திரிஷா சம்பந்தமான காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. கார்த்தி வந்தியத்தேவனாகவும், திரிஷா குந்தவையாகவும் நடித்துள்ளனர். முதல் பாகத்தினை போல் இவர்களின் கதாபாத்திரத்திற்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் ஒருசில காட்சிகளில் வந்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். மேலும், ஜெயம் ரவியின் அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் 2 வசூல்இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி தமிழ்நாட்டில் இந்தப்படம் முதல் நாளில் ரூ.18 வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது முதல் பாகத்தின் வசூலை விட கம்மி. மேலும், அனைத்து மொழிகளையும் சேர்த்து ரூ.30 கோடி முதல் ரூ.32 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.