இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பொது மருந்துகளின், சில்லறை விலையில், 20 சதவீதமும், அத்தியாவசிய மருந்துகளின், சில்லறை விலையில், 14 சதவீதமும் உயர்த்த, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில், சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வேளையில், இரு வேளை உணவுகள் கிடைக்கவே, போராடி வருகின்றனர்.
கடந்த மாதம், அந்நாட்டின் பணவீக்க விகிதம், 35 சதவீதத்தை எட்டிய நிலையில், உணவு பணவீக்க விகிதம், 47 சதவீதமாக உயர்ந்ததாக, அந்நாட்டில் இருந்து வெளிவரும், தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் எனும், ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
இச்சூழலில், அந்நாட்டின் மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், மருந்துகளின் விலையை, 39 சதவீதம் உயர்த்த வேண்டும் இல்லாவிட்டால், மருந்து தொழில் வீழ்ச்சியடையும் என, சில மாதங்களுக்கு முன் சுட்டிக்காட்டியது, .
ஆனால், பொது மருந்துகளின், சில்லறை விலையில், 20 சதவீதத்தையும், அத்தியாவசிய மருந்துகளின், சில்லறை விலையில், 14 சதவீதமும் உயர்த்தி, பாகிஸ்தான் நிதி அமைச்சகம், ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியால் பாக்., மக்களுக்கு, எரிவாயு, மி்ன்சாரம், பெட்ரோல் மற்றும் மாவு போன்ற, அன்றாட தேவைகள் கிடைப்பதில், சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போதைய, மருந்துகளின் விலை உயர்வு, சராசரி மக்களை, மருந்துகள் வாங்கும் நிலைக்கு தள்ளிவிடும் என, அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்