வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமரின் மன் கி பாத் 100-வது நிகழ்ச்சி ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நிகழ்வுகள் மாணவர்களுக்கு தேர்வுக்கான ஆலோசனை போன்ற விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அகில இந்திய வானொலி வாயிலாக நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு மன் கி பாத் என பெயரிடப்பட்டுள்ளது; இது 100வது நிகழ்ச்சியாக வரும் நாளை (ஏப்.30) ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் 100வது நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக பல்வேறு மொழிகளில் ஒலிபரப்ப உள்ள நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேரடியாக ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு, மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல், நியூயார்க்கில் உள்ள நம் நாட்டின் துணை துாதரகம் சார்பிலும், மன் கி பாத் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement