திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
செகந்திராபாத்தில் இன்று காலை கனமழை பெய்த நிலையில், கலாசிகுடா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பால் பாக்கெட் வாங்குவதற்காக் தனது தம்பியை அழைத்துச் சென்றார்.
அப்போது, அவரது தம்பி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
தனது தம்பியை காப்பாற்ற முயன்றபோது சிறுமி அருகில் மூடி திறந்திருந்து கிடந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்க முயன்ற போதும், மழை வெள்ளம் அவரை இழுத்துச்சென்ற நிலையில் மீட்புப்படையினர் சிறுமியை சடலமாக மீட்டனர்.