தமிழகத்தில் அடுத்தடுத்து படுகொலைகள் நடப்பதை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக கண்டித்துள்ளார்.
1,000 எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் ஆகுமா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மணல் மாஃபியாக்களை எதிர்த்து தீரத்துடன் குரல் கொடுத்தவரை வெட்டி படுகொலை செய்தது மாஃபியா கும்பல்.
மணல் கடத்தலுக்கு எதிராக புகார் கொடுக்க பயந்த அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் தயங்கி வந்த நிலையில், முதல் ஆளாக புகார் கொடுத்தவர் லூர்து பிரான்சிஸ். காவல்துறைக்கு மட்டுமே புகார் கொடுத்த விஷயம் தெரிந்த நிலையில் அதை மணல் மாஃபியா கும்பல் தெரிந்து கொண்டு அலுவலகத்திற்கே சென்று படுகொலை செய்தது மாஃபியா கும்பல்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் காஞ்சிபுரத்தில் ஆக்கிரமப்புகளை தட்டிக் கேட்ட இன்னொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சர்புதின் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சர்புதின் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமைடைந்த சர்புதின் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில் இந்த சம்பவங்களை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பே இன்னும் அடங்கவில்லை, அதற்குள்ளாக திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்புதின் வெட்டிப் படுகொலை, சேலம் ஓமலூரில் அரசு ஊழியர்- விஏஓ வினோத்குமார் மீது கொலை முயற்சி என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற வேதனைக்கேள்வியை எழுப்புகிறது. கமிஷனிலும் கலெக்சனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த முதல்வர் காண்பிக்க தவறுவதை வன்மையாக கண்டிப்பதுடன், ரவுடிகள் அச்சமின்றி நடைபெறும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.