செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை, மர்மநபர்கள் வெட்டிப்படுகொலை செய்தனர்.
திருக்கழுக்குன்றம் ருத்திரன் கோயில் தெருவைச் சேர்ந்த சர்புதீன், மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக சிலர் சர்புதினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 24-ம் தேதி, மிரட்டல் குறித்து திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் சர்புதின் புகாரளித்துள்ளார்.
மங்கலம் பகுதியில், நண்பர்களுடன் பேசிவிட்டு தனது காரில் ஏறிய சர்புதினை, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரினுள் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதில் நிகழ்விடத்திலேயே சர்புதின் உயிரிழந்த நிலையில், கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டுமே 7க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளது