லண்டன் சாலையில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: பொலிஸார் முக்கிய வேண்டுகோள்


பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டில் கார் ஒன்று மோதியதில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கார் மோதல்

வடக்கு லண்டனின் என்ஃபீல்டில்(Enfield) உள்ள கிரீன் லேன்ஸில்(Green Lanes) வெள்ளிக்கிழமை மாலை 6:43 மணியளவில் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியது.

இதில் 8 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  சம்பவ இடத்திலேயே சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. 

லண்டன் சாலையில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: பொலிஸார் முக்கிய வேண்டுகோள் | 8 Yrs Old Boy Dead After Hit By Car In Uk LondonGoogle Maps

இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், பின்னர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஆதரவு அளிக்கப்பட்டு வருகின்றனர்.

சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்த புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டன் சாலையில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: பொலிஸார் முக்கிய வேண்டுகோள் | 8 Yrs Old Boy Dead After Hit By Car In Uk LondonGetty

பொலிஸார் வேண்டுகோள்

இந்த விபத்தை தொடர்ந்து, கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டார், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த ஓட்டுநர்கள் தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய டாஷ் கேம் காட்சிகள் இருந்தால் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.