திருச்சி விமான நிலையத்தில் 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!
திருச்சி விமான நிலையம் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தல் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தை தடுக்கும் விதமாக சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும்,வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளையும் மிக தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின் போது பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தனித்தனியாக தீவிரமாக சோதனை செய்தனர். அதில் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியின் உடைமைகளை முழுமையாக சோதனை செய்தனர்.
அப்போது, அந்த பயணி தனது லேப்டாப் சார்ஜரில் தங்கம் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 30 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.