திருவனந்தபுரம்:கேரளாவில், 7 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு, 66 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், பத்தணம்திட்டா மாவட்டம், பிரக்கானத்தைச் சேர்ந்த, 40 வயது நபர் மனைவி மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் மற்றும் இரவில் மனைவி துாங்கிய பின், மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். மகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாய், இதுகுறித்து அவர் படிக்கும் பள்ளி ஆசிரியையிடம் கூறினார்.
ஆசிரியைகள், சிறுமியை தனியாக விசாரித்த போது, நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
தந்தை மீது பத்தணம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பத்தணம்திட்டா முதன்மை ‘போக்சோ’ நீதிமன்றம், காமக்கொடூர தந்தைக்கு, 66 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement