பெங்களூருவில், ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ்-ன் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ரவீந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடைபெற்ற சோதனையில், பல முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை சுமார் 28 ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீடாக அந்நிறுவனம் பெற்றதும், 9,754 கோடியை அந்நிய முதலீடு எனக்கூறி பல்வேறு அந்நிய நிறுவனங்களுக்கு அனுப்பியதும் சோதனையில் தெரியவந்துள்ளதாக, சொல்லப்படுகிறது. 944 கோடி ரூபாய் மதிப்பில், விளம்பரம், சந்தைப்படுத்துதல் செலவாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2020-21 நிதியாண்டிலிருந்து அதன் நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கவில்லை என்பதில், உள்நோக்கம் இருக்கலாம் என சந்தேகிப்பதாக, அமலாக்கத்துறையினர் கூறுகின்றன.
மேலும், பைஜூஸ் நிறுவன கணக்குகள் தணிக்கை செய்யப்படாததும் சோதனையில் தெரியவந்துள்ளதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.