லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச சூப்பர் மாடல் அழகி கிம் கர்தாஷியன் போன்ற முக அமைப்புக் கொண்ட ஒன்லி ஃபேன்ஸ் மாடல் அழகி கிறிஸ்டினா ஆஷ்டன் கோர்கானி (Christina Ashten Gourkani) மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 34.
அமெரிக்க மாடல் அழகியான கிறிஸ்டினா ஆஷ்டன் பார்ப்பதற்கு அச்சு அசல் கிம் கர்தாஷியன் போலவே இருப்பார்.
Only Fans செயலி மூலம் ரசிகர்களுக்கு அந்தரங்க போட்டோக்களை ஷேர் செய்து பிரபலமாகி வந்த கிறிஸ்டினா பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததன் விளைவாக மரணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிம் கர்தாஷியன் lookalike காலமானார்: அமெரிக்க டிவி நடிகையும் சர்வதேச சூப்பர் மாடல் அழகியுமான கிம் கர்தாஷியனுக்கு இன்ஸ்டாகிராமில் 350 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 35 கோடி ரசிகர்களை கொண்டுள்ள கிம் கர்தாஷியனை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட மாடல் அழகி கிறிஸ்டினா ஆஷ்டன் கோர்கானி மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது வெறும் 34 என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கிம் கர்தாஷியன் போலவே மேக்கப் செய்துக் கொள்வது அவரை போன்ற தோற்றத்திலேயே தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்துவது என தனது ஒன்லி ஃபேன்ஸ் கணக்கில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் கிறிஸ்டினா.
பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த மாரடைப்பு: நடிகைகள் சினிமாவுக்கு வரும் போது ஒரு மாதிரியும் ஸ்டார் ஆகும் போதும் வேறுமாறி காட்சியளிக்க காரணம் அடிக்கடி அவர்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள செய்யும் சில பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் மற்றும் காஸ்மெடிக் சர்ஜரிக்கள் தான்.
கிம் கர்தாஷியன் போன்றே மாற வேண்டும் என்பதற்காக அடிக்கடி சில பிளாஸ்டிக் சர்ஜரிக்களை செய்து வந்தது தான் கிறிஸ்டினாவுக்கு 34 வயதிலேயே திடீரென மாரடைப்பு வரக் காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டு தனது மார்பகங்களை பெரிதாக்குவது, முகத்தை அழகுப்படுத்த நினைப்பது, இடையழகை இஷ்டத்துக்கு குறைப்பது என ஏகப்பட்ட வேலைகளை கிறிஸ்டினா செய்து வந்த நிலையில், பல கெமிக்கல் மாற்றங்கள் உடலில் நடந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்படி இளம் வயதில் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மாடலிங் துறையில் அசத்தி வந்த கிறிஸ்டினாவின் மறைவு செய்தி அறிந்த சில பிரபல மாடல்களும் அவரது ஒன்லி ஃபேன்ஸ் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கிம் கர்தாஷியனின் சமூக வலைதள பக்கங்களை டேக் செய்து பலரும் கிறிஸ்டினாவுக்கு இரங்கல் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். கிம் கர்தாஷியன் அஞ்சலி செலுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.