புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் குறித்து தேசிய அளவிலான பதிவேட்டை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பான இடம் பெயர்வுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, வடமாநில தொழிலாளர்களை விருந்தினர்கள் என்ற உணர்வுடன் பாதுகாக்க வேண்டும் என்றார்.