இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘யானையை அடக்கி வைத்தாலும் அதை முட்டாள் ஆக்கவில்லை.. அவை மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு இளம் பெண் நின்று கொண்டு யானையை வெளியே வரவைக்க முயல்கிறார். அந்தப் பெண் தான் வைத்திருக்கும் தாரில் இருந்து ஒரு வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுத்து யானையின் முன்னால் அசைக்கிறாள்.
யானை கடிக்க முயலும் போது, அவள் உடனடியாக தன் கைகளை பின்னால் இழுத்து அதன் வாயில் பழத்தை வைத்தாள். இதே செயலை மீண்டும் மீண்டும் செய்ததால் யானை எரிச்சல் அடைந்தது. அந்தச் சம்பவத்தைப் படமெடுத்துக் கொண்டிருந்த மற்றப் பெண், யானை புதருக்குள் இருந்து ஓரளவு வெளிப்பட்டபோது, ”என்ன நண்பா” என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.
அமைதியை இழந்த யானை, அந்த இளம் பெண்ணை முட்டி தள்ளியது. யானை முட்டியதில் அந்து பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. சமூக ஊடக பயனர்கள் கவலையளிக்கும் காட்சிகளைக் பார்த்து, அது முழுக்க முழுக்க பெண்ணின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.