சென்னை புறநகர் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தான மின்சார ரயில்கள் இயங்கி வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளதால் கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இதில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திங்கள் முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமை போன்ற வேலை நாட்களில் அதிக அளவிலான ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.
மேலும் பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் குறைவான ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாளை மே 1ம் தேதி விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.