டெக்சாஸில் வீடு ஒன்றில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தை உட்பட 5 பேருக்கு நேர்ந்த பரிதாபம்


அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வீட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 8 வயதுடைய குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு

வெள்ளிக்கிழமை டெக்சாஸின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 8 வயதுடைய குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 11:31 மணியளவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சான் ஜசிண்டோ கவுண்டி ஷெரீப் அலுவலகத்திற்கு(San Jacinto County Sheriff) எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸில் வீடு ஒன்றில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தை உட்பட 5 பேருக்கு நேர்ந்த பரிதாபம் | 8 Yrs Boy Among 5 Killed In Texas Gun ShootingAP

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு பலர் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடப்பதை கண்டறிந்ததாக ஏபிசி செய்தி நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது ஒரு வீட்டில் நடந்து இருப்பதாகவும், அதில் 8 வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், ஐந்தாவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸில் வீடு ஒன்றில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தை உட்பட 5 பேருக்கு நேர்ந்த பரிதாபம் | 8 Yrs Boy Among 5 Killed In Texas Gun ShootingAP

பொலிஸார் விசாரணை

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தையோ, அரங்கேற்றப்பட்ட குற்றத்தில் சந்தேக நபராக கருதப்படும் நபரின் சாத்தியமான விவரங்களையோ பொலிஸார் வெளியிடவில்லை.

ஆனால், குடிபோதையில் ஆயுதமேந்திய பின்னர் தப்பியோடிய சந்தேக நபர் ஒரு மெக்சிகன் என்று சான் ஜசிண்டோ கவுண்டி ஷெரீப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் என்வென்றும் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெக்சாஸில் வீடு ஒன்றில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தை உட்பட 5 பேருக்கு நேர்ந்த பரிதாபம் | 8 Yrs Boy Among 5 Killed In Texas Gun ShootingAP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.