மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அதிவிரைவு ரயில் மும்பை விடி ஸ்டேஷனில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் கர்நாடகா, ஆந்திரா, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி வழியாக நாகர்கோவில் செல்கிறது.
இந்த ரயிலில் நேற்று காலை கழிவறையிலும் வாஷ்பேஷினிலும் தண்ணீர் வராததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த போது நடைமேடையில் இறங்கி ரயில்வே அதிகாரிகளோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விழுப்புரத்தில் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.