இன்றைய நிகழ்ச்சியில்…
திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் உதவிப் பேராசிரியர் பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் `பூச்சிகளும் நண்பர்களே!” என்ற தலைப்பில் இன்னும் சற்று நேரத்தில் பேச உள்ளார்.
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் குறித்து தஞ்சாவூர், மரபுசார் மூலிகை மருத்துவ ஆய்வு மையம், முன்னாள் துறைத்தலைவர் முனைவர் புண்ணியமூர்த்தி பேசுகிறார்.
வீட்டுத்தோட்டம் போடலாம் வாங்க! என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர், பிரியா ராஜ்நாராயணன் பேசுகிறார். மேலும், விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்து நேரடி செயல்விளக்கம் நடைபெறும்.
அன்புடன் அழைக்கிறோம்…
திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்து செல்லும் தொலைவில் உள்ளது கலையரங்கம். காலை 10 மணி முதல் இரவு 7.30 வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30 மாணவர்களுக்கு ரூ.15 ஆகும். விவசாய பெருமக்கள், பொதுமக்கள் அனைவரையும் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.