வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மன்கிபாத் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்தது. என்றும் , மக்களுடன் பேசுவது தமக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியது என்றும் இன்றைய 100 வது நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோடி பேசியதாவது: மன்கிபாத் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. மக்கள் இது கொண்டாடக்கூடிய இடமாக திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல கடிதங்கள் வந்துள்ளன. இதன்மூலம் பல்வேறு உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சாதனையாளர்களை தொடர்பு கொண்டு பேசுவதுடன், அவர்களை பாராட்டும் வாய்ப்பும் கிடைத்தது.
மக்களுடனான தொடர்புக்கு ஒரு முக்கிய கருவியாக இருந்தது. லட்சக்ககணக்கான இந்தியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருந்தது. மூலை முடுக்கில் உள்ளவர்களிடமும் தொடர்பை ஏற்படுத்தியது. மன்கிபாத் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கியது. பலரது பாராட்டையும் பெற்றது.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. மக்களின் செயல்பாடுகள் பல பாரட்டும் விதமாக இருந்தது. கண்மாய் தூர்வாரல், நீர் சேமிப்பு என பலரும் நல்ல விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மன்கிபாத்தில் பங்கேற்றவர்கள், மற்றும் இந்நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து இயக்குபவர்கள் அனைவரும் ஹீரோக்களே என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement