
மாறுபட்ட கதையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2: டிரைலர் வெளியீடு
சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டிரைலரை பார்க்கும்போது முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையில் இரண்டாம் பாகம் உருவாகி இருப்பது தெரிகிறது. மேலும் மே 19ம் தேதி பிச்சைக்காரன்-2 திரைக்கு வருவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கி நடித்திருப்பது மட்டுமின்றி, தயாரித்து இசையும் அமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.