Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 எப்படி?: ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக்கின் அசத்தல் விமர்சனம்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Abhishek Bachchan about Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 பற்றி விமர்சித்து அபிஷேக் பச்சன் போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்து ரசித்தார் விக்ரம். அப்பொழுது ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்களும் எடுத்தார். இதற்கிடையே படம் பார்த்த அனைவரும் நல்லவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.

​Rajinikanth: பாலகிருஷ்ணா செய்வதை என்னால் செய்ய முடியாது, மக்கள் ஏத்துக்க மாட்டாங்க: ரஜினி
​அபிஷேக் பச்சன்​பொன்னியின் செல்வன் 2 படத்தை சென்னையில் இருக்கும் தியேட்டரில் தன் மனைவி ஐஸ்வர் ராய், மகள் ஆராத்யா, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோருடன் சேர்ந்து பார்த்தார் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன். படம் பார்த்த அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் 2 படம் ஃபென்டாஸ்டிக்!!!. விவரிக்க வார்த்தையே இல்லை. மணிரத்னம் சார், சீயான், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் மொத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என் திருமதியை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. அவரின் சிறந்த நடிப்பு இது தான் என தெரிவித்துள்ளார்.
​ஐஸ்வர்யா ராய்​பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த அனைவரும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஷோ ஸ்டீலர் ஐஸ்வர்யா ராய் தான் என்கிறார்கள். சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராயின் நடிப்பு தான் படத்தின் ஹைலைட்டே என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் அபிஷேக் பச்சனும் தன் மனைவியின் நடிப்பை நினைத்து பெருமைப்பட்டிருக்கிறார்.

​AK62: என்னது இது தான் அஜித்தின் ஏ.கே. 62 பட தலைப்பா?!

​ஜெயம் ரவி​அபிஷேக் பச்சனின் ட்வீட்டை பார்த்த ஜெயம் ரவி கூறியிருப்பதாவது, சோ ஸ்வீட் பிரதர். எங்களுக்காக நீங்கள் உண்மையிலேயே சந்தோஷப்படுவது தெரிகிறது. உங்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். படம் பார்க்க வந்த இடத்தில் ஆராத்யாவை ஹக் செய்த த்ரிஷா, நீ அம்மா அளவுக்கு வளர்ந்துவிட்டாய் என்று கூற அவர் ஸ்மைல் செய்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
​வசூல்​Vanitha Vijayakumar: பீட்டர் பால் மரணம்: உருக்கமாக ட்வீட்டிய வனிதா, ரசிகர்கள் ஆறுதல்பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸான அன்று ரூ. 32 கோடி வசூல் செய்தது. படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ. 56 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரூ. 500 கோடி வசூலித்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2 படக்குழு படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்தது பலரை தியேட்டர்களுக்கு செல்ல வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.