ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ajith helping tendency: அஜித் குமார் ரகசியமாக செய்யும் வேலை குறித்து அறியும் ரசிகர்கள் அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
அஜித்சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தார் அஜித் குமார். நடிக்க வந்ததுமே பெரிய ஆளாகிவிடவில்லை. கஷ்டப்பட்டு முன்னேறினார். ஆனால் கெரியர் நன்றாக சென்று கொண்டிருந்தபோது அடிவாங்கியது. நம்பிக்கையை இழக்காமல் நல்ல கதை வரும் என காத்திருந்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை, கெரியர் மீண்டும் பிக்கப்பாகி தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது.
குணம்அஜித் எனும் நடிகனை தான்டி அஜித் எனும் தனி மனிதனை பலரும் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் அவரின் குணம். அது என்ன அஜித் ரகசியமாக செய்யும் காரியங்கள் என்று கேட்கிறீர்களா?. சம்பாதித்தோமா, நம் குடும்பத்தை மட்டும் காப்பாற்றினோமா என்று சுயநலமாக இருப்பவர் இல்லை அஜித். தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். தான் உதவி செய்வதை வெளியே சொல்லக் கூடாது என அன்புக் கட்டளையிட்டுவிடுகிறார்.
ரகசியம்Ajith: அந்த பெண்ணின் கணவர் சொன்னதால் வெளியே வந்த உண்மை, இல்லைனா அஜித்தாவது…உதவி செய்வதை ரகசியமாக செய்கிறார். பிறருக்கு உதவுவதை வைத்து பப்ளிசிட்டி தேட விரும்பாதவர் அஜித். அவர் அப்படி ரகசியமாக ஏராளமானோருக்கு உதவியிருக்கிறார். அதில் ஒரு சிலர் உணர்ச்சி மிகுதியால் அஜித் செய்த நல்ல காரியங்களை வெளியே சொல்லிவிடுகிறார்கள். அப்படி ஏதாவது கசிந்தால் தான் அஜித் உதவி செய்வதே தெரிய வருகிறது.
கண் ஆபரேஷன்மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜயசங்கர் ஒரு கண் டாக்டர். அவரிடம் அஜித் பற்றி கேட்டால் கதை கதையாக சொல்வார் என்பார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பல்லாயிரம் பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய பணம் கொடுத்து உதவியிருக்கிறார் அஜித். இது குறித்து விஜய்சங்கர் ஒரு முறை ராதாரவியிடம் கூறியிருக்கிறார். அதில் இருந்து அஜித் மீதான மரியாதையால் அவரை அஜித் சார் என்று அழைத்து வருகிறார் ராதாரவி.
Ajith: அந்த காரணத்தால் தான் அஜித்தை அஜித் சார்னு அழைக்கிறேன்: ராதாரவி
ரசிகர்கள்கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் அஜித். ஆனால் அந்த பணத்தில் அவர் தான, தர்மங்களும் செய்து வருகிறார். படிக்க உதவி, சிகிச்சைக்கு பணம் என தன்னை நாடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்து கொண்டிருக்கிறார். அவரின் இந்த குணம் தான் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அவரை கொண்டாட செய்கிறது.
Ajith: இதய ஆபரேஷனுக்கு பணம் கேட்ட பொன்னம்பலம்: நெகிழ வைத்த அஜித்
அன்புவிருது விழாக்கள், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அஜித்தை பார்க்க முடியாது. தற்போது எல்லாம் விமான நிலையத்தில் தான் அஜித்தை பார்க்க முடிகிறது. அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஓடிச் சென்று செல்ஃபி கேட்கிறார்கள். அவரும் அவர்களின் அன்புக் கோரிக்கையை ஏற்று போஸ் கொடுக்கிறார். அஜித்துடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். அப்படித் தான் அஜித்தை அடிக்கடி பார்க்க முடிகிறது.
குடும்பம்Ajith: அஜித்தின் ‘வாலி’ படம், நடிகை ஜோதிகாவுக்கு வயசு 24: ரசிகர்கள் கொண்டாட்டம்அஜித் ஒரு பக்கா ஃபேமிலி மேன். ஷூட்டிங் இல்லை என்றால் குடும்பத்தாருடன் தான் இருப்பார். மனைவி ஷாலினி மெச்சும் கணவராக இருக்கிறார். அனௌஷ்கா, ஆத்விக்கிற்கு நல்ல அப்பாவாக இருக்கிறார். அவர் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் விதமும் ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் பிடித்திருக்கிறது.