ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி இரு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியுடன் விளையாடியது. ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது.
இந்த போட்டி குறித்து ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:-
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வேற லெவலாக உள்ளது. விக்கெட் எடுக்க எடுக்க எண்ணெய் கிணற்றில் இருந்து வருவதை போல பேட்ஸ்மேன்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். தூபே வராரு, அவர் போனா மொயீன் அலி வராரு, டோனி (pad) பேட் கட்டிக்கொண்டு வெளியே உட்கார்ந்திருக்கிறார். விக்கெட் எடுக்காதடா அவர் (டோனி) வந்தால் சிக்சர்களாக அடிப்பார் என பார்ப்பவர்களுக்கு தோன்று விதமாக உள்ளது” என்று கூறினார்.