ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு மேல் விந்தணுவை செய்தவர், இனி தானம் செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விந்தணு பரிசோதனைக்கு விந்து சேகரிக்கும் முறை
நெதர்லாந்தின் ஹேக் நகரைச் சேர்ந்தவர் 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர். தற்போது கென்யாவில் வசித்துவரும் ஜொனாதன், குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் முலம் குழந்தை பெறும் வகையில் தனது விந்தணுவை தானம் செய்து வருகிறார். தனது விந்தணுவை நெதர்லாந்தில் உள்ள 11 கிளினிக்குகள் உள்பட மொத்தம் 13 கிளினிக்குகளுக்கு தானம் செய்துள்ளார்.
இவரால் தானம் செய்யப்பட்ட விந்தணுவால் இதுவரை 550 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தநிலையில் அதிகளவு விந்து தானம் செய்வதால் பிறக்கும் குழந்தைகள், வளர்ந்த பின் தாங்கள் சகோதரர்கள் என்று தெரியாமலேயே உடலுறுவில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜொனாதான் தானம் செய்வதை நிறுத்தாமல் சமூக ஊடகங்கள் மூலம் வீட்டில் கருவூட்டல் தேடும் பெற்றோரை அணுகியதாகவும், அவரது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை குற்றம்சாட்டப்பட்டது.
இந்தசூழலில் ஜொனாதனால் குழந்தை பெற்ற டச்சு தாய் மற்றும் அவரின் விந்தணுவை பெற்று 25 குடும்பங்களை உருவாக்கிய DonorKind என்ற அறக்கட்டளையும் சேர்ந்து ஜொனாதன் மீது புகார் கொடுத்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் விந்தணு தானம் பெறும் கிளினிக்குகளை தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளை உளவியல் ரீதியாக ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
டச்சு சட்டவிதிகளின்படி, விந்து தானம் செய்பவர்கள் 12 பெண்களுக்கு மேல் தானம் செய்யக்கூடாது அல்லது 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது. குழந்தைகள் வளர்ந்தபிறகு தங்களுக்கு நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் இருப்பதை அறியாமல், உடன்பிறப்புகளுக்குள்ளேயே தற்செயலான இனப்பெருக்கம் செய்வது மற்றும் உளவியல் சிக்கல்களைத் தடுக்க இத்தகைய டச்சு சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எதுவும் செய்யாததால் இந்த மனிதருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் அவர் சமூக வலைதளம் மூலமாக உலகளவில் உள்ள குழந்தை இல்லாத பெற்றோர்களை குறிவைத்துள்ளார் என அறக்கட்டளை குற்றம்சாட்டியது. அதேபோல் ஜொனாதன் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக உள்ளார் என்பதை தெரிந்திருந்தால், அவரை நான் அணுகியிருக்கவே மாட்டேன் என்கிறார் அந்த டச்சுதாய்.
அமெரிக்கா: ‘கையை கட்டி.. வாயை பொத்தி’.. பெற்ற குழந்தைகளையே.. அய்யோ பாவம்.!
வழக்கு தொடரப்பட்ட பின்னர் ஜொனாதன் நெதர்லாந்தில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஜொனாதன் மீதான் வழக்கு நடைபெற்று வந்தநிலையில், அவர் இனிமேல் விந்தணுவை தானம் வழங்க கூடாது என நெதர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் விந்தணுவை வழங்குவதை நீதிமன்றம் தடை செய்வதாக அறிவித்துள்ளது. ஜொனாதனால் குழந்தை பெற்ற பெற்றோர்கள் அனைவரும், இப்போது தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஒரு பெரிய உறவினர் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது வருந்ததக்கது என நீதிமன்றம் கூறியுள்ளது.