மன் கி பாத் 100: பிரதமர் மோடி சொன்ன வேலூர் நாக நதி… தமிழக பெண்கள் செஞ்ச அசாத்தியம்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து, மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி ஆல் இந்தியா ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதன் 100வது எபிசோடு இன்று ஒலிபரப்பானது. அதில் உரையாற்றிய பிரதமர் மோடி, 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை ஒட்டி நாட்டு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறது. அக்டோபர் 3, 2014ல் விஜய தசமி நாளில் மனதின் குரல் நிகழ்ச்சியை தொடங்கினோம்.

மனதின் குரல்

அதன்பிறகு ஒவ்வொரு நிகழ்ச்சியும் திருவிழாவாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையை எதிர்நோக்கி நாட்டு மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது பிறரிடம் உள்ள சிறந்த பண்புகளை கொண்டாடக் கூடியது. ஒருவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு கடத்தும் சிறந்த கருவியாக மனதின் குரல் திகழ்ந்து வருகிறது. நான் குஜராத் முதல்வராக இருந்த போது மக்களை சந்திக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்.

டிஜிட்டல் யுகம்

அந்த வேலை அப்படிப்பட்டது. ஆனால் 2014க்கு பின்னர் மக்களுடன் சந்திப்பு என்பது வேறு மாதிரியாக மாறிவிட்டது. என்னுடைய வேலை மற்றும் பொறுப்புகளில் மாற்றங்கள் வந்துவிட்டன. பாதுகாப்பு, நேர கட்டுப்பாடு உள்ளிட்டவை தினசரி வாழ்வை புதிய கோணத்தில் மாற்றியது. இந்த சூழலில் டிஜிட்டல் யுகம் நம்மை பெரிதும் மாற்றிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் இருக்கும் போது இந்நாட்டு மக்களை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மனதின் குரல் நிகழ்ச்சி இதற்கு ஒரு தீர்வை அளித்தது.

தன்னார்வலர்கள்

சாமானியர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் இருந்து வரும் ஏராளமான மெசேஜ்களை நான் படித்து வருகிறேன். இந்த நாட்டிற்காக ஒவ்வொருவரும் செய்து வரும் தியாகங்கள் ஆச்சரியமளிக்கிறது. அதில் சிறிதளவேனும் நான் செய்திருப்பேனா? எனத் தெரியவில்லை. நம் நாட்டில் மலைகளில் செடிகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள், நீர் வளத்தை மேம்படுத்த கிணறுகள், குளங்கள் வெட்டுபவர்கள் உள்ளார்கள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள முயற்சி எடுப்பவர்கள் உள்ளனர்.

சுனில் ஜக்லான்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களை பற்றியெல்லாம் பேசும் போது நான் மிகவும் உணர்ச்சி வசப்படுவேன். இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் பழைய நினைவுகள் பலவும் என் கண் முன்னால் வந்து செல்கின்றன. மனதின் குரலில் பேசிய அனைத்து நாயகர்களும் தான் இந்த நிகழ்ச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஹரியானாவை சேர்ந்த சகோதரர் சுனில் ஜக்லான் என்னுடன் இன்று இருக்கிறார். அவர் தனது சொந்த மாநிலத்தில் பாலின விகித வேறுபாட்டை குறைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.

வேலூர் நாக நதி

இவரது செல்பி வித் டாட்டர் (Selfie with Daughter) பிரச்சாரம் பற்றி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்ற முயற்சிகள் ஹரியானாவில் பாலின வேறுபாட்டை முன்னேற்றம் அடையச் செய்துள்ளன. தமிழகத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் இந்த நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். வேலூர் நாக நதியை சுத்தம் செய்ய 20 ஆயிரம் பெண்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் பெண்களின் ஆளுமை திறனை காட்டுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.