சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்ற இலங்கை அணி..!!

காலே,

இலங்கை- அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 492 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக மதுஷ்கா இரட்டை சதமடித்து 205 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார்.

பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது .அதில் அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . இறுதியில் 77.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு அயர்லாந்து அணி ஆட்டமிழந்தது. இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளும், அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர்.

இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்ற 8வது அணி என்ற பெருமையை இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு இது ஒரு மைல்கல் தருணம் ஆகும். 1982 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை இதுவரை 311 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

அவர்கள் 119 டெஸ்டில் தோற்றுள்ளனர் மற்றும் 92 போட்டிகளை டிரா செய்துள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற அணிகளாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.