“வண்ண குடை மாற்றம் ” அலை மோதியது உற்சாகம்: திருச்சூர் பூரம் விழா கோலாகலம்| Colour Umbrella Change Wave Crashes Excitement: Thrissur Pooram Festival Ablaze

பாலக்காடு:கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து நின்று “வண்ணக் குடை மாற்றும்” நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு பூரம் திருவிழா நேற்று துவங்கின.இவ்விழாவில் 70-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் கலந்து கொண்டன. வடக்குநாதரை வணங்கி நெய்தலைக்காவு பகவதி அம்மன் எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி, தெற்குப் கோபுர நடை திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தோடு விழா ஆரம்பித்தன.விழாவில் அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 7.30 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோவில் உற்சவர் எழுந்தருளி ஏழு யானைகளின் அணிவகுப்புடன் தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து வடக்குநாதரை வணங்கி மேற்கு கோபுர நடை வழியாக வெளியில் வந்தார்.

இதேபோல், விழா கொண்டாடும் உப கோவில்களான லாலூர் பகவதி அம்மன் கோவில், அய்யந்தோள் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், நெய்தலைக்காவு பகவதி அம்மன், செம்பூக்காவு பகவதி அம்மன், பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோவில், சூரக்கோட்டுக்காவு பகவதி அம்மன், காரமொக்கு பகவதி அம்மன், கணிமங்கலம் சாஸ்தா உற்சவர்களும் யானைகளில் மீது எழுந்தருளி வடக்குநாதரை வணங்கி சென்றனர். இதில் நெய்தலைக்காவு பகவதி அம்மன் எழுந்தருளியது பெரும் ரசிகர்கள் உள்ள ஆசியாவின் மிக உயரமான யானையான தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் மீது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின் காலை வடக்குநாதர் சன்னிதியில் எட்டிய பிரஹ்மசுவம் மடத்தில் இருந்துள்ள யானைகளின் அணிவகுப்பிற்கு கோங்காடு மதுவின் தலைமையிலான பஞ்சவாத்தியம் முழங்கின. இதை கண்டு அனுபவிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மைதானத்தில் திரண்டு வந்தனர்.

இதையடுத்து 12.00 மணிக்கு பாரமேக்காவு பகவதி அம்மன் “செம்படை மேளம்” என்ற அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க 15 யானைகள் அணிவகுடன் எழுந்தருளி வடக்கும்நாதர் சன்னதிக்கு வரும் வைபவம் நடந்தன.

latest tamil news

இதன்பின் ‘இலஞ்சித்தறைமேளம்” என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டன. 250க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செண்டை மேள வித்வான் கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமை வகித்தார். மூன்று மணி நேரத்திற்கும் இடைவிடாமல் நடந்த இந்த “இசை மழை” நிகழ்ச்சியை ஆங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பரவசப்படுத்தியது.

மாலை 4.30 மணி அளவில் திருவம்பாடி கோவிலுக்கு சொந்தமான 15 யானைகள் ராஜ அலங்காரத்துடன் வடக்கு நாதர் கோவில் முன் வந்து நின்றன.அப்போது, வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுரம் வழியாக பாரமேக்காவு பகவதி கோவில் யானைகள் வெளியே வந்து சக்தன் தம்புரான் மன்னரை வலம் வந்து வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுர நடை வாயிலை நோக்கி நின்றன.

இதையடுத்து மாலை 5.30க்கு 30 கோவில் யானைகளின் மீதும் அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணக் குடையை மாற்றினர். இரு தரப்பினர் போட்டி போட்டு நடத்திய இந்த “குடைமாற்றம்” நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் திரண்டிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

பூரம் விழாவையொட்டி நான்காயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.