வீட்டிலேயே எளிதாக புளிப்பான சட்னி செய்யலாம்


இட்லி தோசையென்றாலே சட்னி தான் ஞாபகத்திற்கு வரும். அதிலும் அந்த சட்னியை பல்வேறு வகையாக செய்யலாம் என்று யாரும் அறிந்ததே.

புளிப்புடனும் சற்று காரத்துடனும் எப்படி சுவையான சட்னி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • புளி – பெரிய நெல்லிக்காய்
  • காய்ந்த மிளகாய் – 10
  • கறிவேப்பிலை – 1/4 கப்

  • மல்லித்தூள் – 2 தே.கரண்டி
  • கருப்பட்டி – சிறிய துண்டு
  • நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப 

வீட்டிலேயே எளிதாக புளிப்பான சட்னி செய்யலாம் | How To Make Sweet Chutney

தாளிக்க

  • கடுகு

  • உளுத்தம்பருப்பு – 1/4 தே.கரண்டி

  • கறிவேப்பிலை

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லிதூள் சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.

  • பின் மிக்ஸியில் இட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் இட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைக் கொண்டு தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • இறுதியாக அரைத்தெடுத்த கலவையை அதனுடன் சேர்த்து வதக்கி எடுத்தால் சுவையான புளிப்பான சட்னி தாயார்.   

வீட்டிலேயே எளிதாக புளிப்பான சட்னி செய்யலாம் | How To Make Sweet Chutney



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.