சென்னை :அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களான சேயோன், சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்கில் வெளியானது.
இப்படத்தில் ரணதீர பாண்டியனுக்கும் எயினர்களுக்கும் நடக்கும் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வெறும் 7 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் புகழ்ந்து பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டி என்ற பேச்சு எழுந்துள்ளது.
யாத்திசை : இந்நிலையில், யாத்திசை திரைப்படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரன் அளித்துள்ள பேட்டியில், யாத்திசை திரைப்படம் பாண்டியர்கள் காலகட்டத்தில் நடிக்கும் ஒரு கற்பனைக்கதை தான். சோழர்களை பற்றி நிறைய புனைக்கதைகள் வந்துவிட்டன. ஆனால், பாண்டியர்கள் பற்றி எந்தவிதமான புனைக்கதையும் வரவில்லை என்பதால், பாண்டியர்கள் பற்றி படம் எடுக்க வேண்டிய தேவை இருந்தது. மீண்டும் சோழர்கள் கதைபற்றி சொல்லலாம என்று யோசிக்கும் போது தான் யாத்திசை திரைப்படத்திற்கான ஐடியா கிடைத்தது.
இதுதான் காரணம் : வேறு ஒரு காலகட்டத்தில் பாண்டியர்களின் நிலப்பரப்பில் இருந்த தொல்குடிகள், ஏய்னர்கள், பள்ளிகள் மேலும் பல தொல்குடிகளை பற்றிய பதிவு இத்திரைப்படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இதுதான் யாத்திசை திரைப்படம் உருவாக அடிப்படை காரணம் அமைந்தது.
இரண்டு படமும் வேறுவேறு காலகட்டம் : மேலும், பொன்னியின் செல்வன் காலகட்டம் வேறு, யாத்திசை காலகட்டம் வேறு. குறிப்பாக யாத்திசை திரைப்படம் தனித்துவமான சில விஷயங்களை சொல்லும், அதே போல இந்த படம் அடிதடி, ஆக்ஷன், போர் என யாத்திசை திரைப்படத்தின் பயணமே வேறு விதமாக இருக்கும். ஆனால், பொன்னியின் செல்வனின் ஐடியாலிஜி வேறுவிதமாக இருக்கும் இதனால் இரண்டு படத்தையும் கம்பேர் செய்து பார்க்க வேண்டாம்.
நாம் பேசிய மொழிதான் : 7ம் நூற்றாண்டில் நடந்த கதையை 1300வருடத்திற்கு பிறகு, மக்களுக்கு சொல்லும் போது அப்போது இருந்த உடை, பண்பாடு அனைத்தும் மொழியில் இருந்துதான் வருகிறது. இந்த மொழியை மறுஉருவாக்கம் செய்யும் போதுதான் அந்த காலகட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்லமுடியும் என்பதால் இந்த மொழியை படத்தில் பயன்படுத்தினேன். இதுவேறு மொழியில்லை ,சங்க காலத்தில் நாம் பயன்படுத்திய தமிழ் சொற்கள்தான்.
காலம் கடந்தும்பேசும் : ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நாம் பேசிய மொழி கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி உள்ளது. இதைபடத்தில் வைத்தால் மக்களுக்கு நிச்சயம் புரியாது என்று எனக்கும் தெரியும் இருந்தாலும், இப்படித்தான் நாம் பேசினோம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் ஒரு தேவை இருந்தது, இதுபோன்ற குறிப்புகள் தான் காலம் கடத்தும் பேசும் என்று இப்படத்தில் பல ஆராய்ச்சு செய்து இந்த மொழியை பயன்படுத்தினேன் என்றார்.