ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஹைப்உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திற்க்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார். தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ். இப்படத்தையும் விக்ரம் படத்தை போல முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார் லோகேஷ். அதன் காரணமாகவே லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. சொல்லப்போனால் வழக்கமாக விஜய் படங்களுக்கு இருக்கும் ஹைப்பை விட லியோ படத்தின் ஹைப் அதிகமாகவே இருக்கின்றது. அதற்கு மிகப்பெரிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.
வான்டட்விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷின் இயக்கத்தில் நடிக்க இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர். மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று லோகேஷிற்கு மிகப்பெரிய தொகையை முன்பணமாக கொடுத்து அவரை புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் லோகேஷ் தற்போது தமிழிலேயே படங்களை இயக்க முடிவெடுத்துள்ளார். அவர் உருவாக்கிய LCU யை வைத்தே தமிழில் இன்னும் ஒரு சில படங்களை இயக்கவுள்ளார் லோகேஷ். அதன் பிறகே தெலுங்கு, பாலிவுட் போன்ற படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது
தலைவர் 171லோகேஷ் தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். இதை முடித்த பிறகு கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விரு படங்களுக்கு பிறகு லோகேஷ் ரஜினியுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே இக்கூட்டணி இணைவதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் ரஜினி லோகேஷின் இயக்கத்தில் நடிக்கமுடியாமல் போனது. இந்நிலையில் தலைவர் 171 படத்தை லோகேஷ் தான் இயக்கவுள்ளார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இப்படத்திற்கு பிறகு ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கயிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதையடுத்து இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது
ரஜினியின் கண்டிஷன்தற்போது கிட்டத்தட்ட ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைவது உறுதியாகிவுள்ளது. மேலும் இப்படத்திற்காக லோகேஷிற்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் தரயிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்திற்காக லோகேஷிடம் ரஜினி ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பல திரைப்படங்களில் ஒன்றுதான் பாட்ஷா. எனவே அதைப்போலவே ஒரு மாசான படத்தை தனக்கு கொடுக்குமாறு ரஜினி லோகேஷிடன் கண்டிஷனாக கூறியிருக்கிறாராம். லோகேஷும் இதற்கு ஒப்புக்கொண்டு ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர முடிவெடுத்துள்ளாராம். இந்நிலையில் ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் படத்தை முடித்துவிட்டு விரைவில் லோகேஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது