உலக வாழ்க்கையில் தொழிலாளர்களின் பணி இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான்; இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்’ என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது. இத்தினத்தில், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்கள், பேரணி மற்றம் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
19ம் நூற்றாண்டில், வளர்ந்த நாடுகளில், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாய வேலை என்று இருந்தது. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியாவில், 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது. உரிமைகளை நிலைநாட்டும் அதே நேரத்தில், கடமைகளையும் தொழிலாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால் தான் உண்மையான தொழிலாளராக இருக்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement