மகாராஷ்ட்ரா மாநிலம் தானே அருகே பிவண்டியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிடங்காக செயல்பட்ட கட்டடம் இடிந்து விழுந்ததில் அதனடியில் படுத்திருந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால் அவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது காயங்களுடன் மீட்கப்பட்ட 14 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.