பாய்மர படகு மூலம் கோல்டன் குளோப் ரேஸ் 2022 – ஐ நிறைவு செய்து இந்திய வீரர் அபிலாஷ் டோமி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படை அதிகாரியான டோமி, ஃபிரான்ஸில் உள்ள Les Sables-d’Olonne லிருந்து , 2022-ம் ஆண்டு தொடங்கிய உலகைச் சுற்றும் தனிப் பாய்மரப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இதையடுத்து 236 நாட்களை கடலில் தனியாக கழித்த டோமி தற்போது தனது பயணத்தை நிறைவு செய்தார் அவரது சாதனைக்கு கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் இந்திய விமானப்படைத் தலைமை தளபதி வி ஆர் சவுத்ரி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும், டோமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.