“அண்ணாமலைக்கு தமிழ் மீதும், தமிழர் மீதும் அக்கறை கிடையாது" – இயக்குநர் அமீர் காட்டம்

கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் ஃப்ரெண்ட்ஸ் பெடரேஷன் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், பள்ளபட்டி நகரில் குற்றச் செயல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, 100 சி.சி.டி.வி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு, அங்குள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவி, திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமீர்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் அமீர், “நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. இந்த தேர்தலும் சாதாரண பொது தேர்தல் போல மாறிவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருகின்றனர். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தேசிய கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர். இத்தகைய செயலை தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன். பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை. புர்கா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். எல்லா படங்களுக்கும் தடை கேட்டுக் கொண்டே இருக்க முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.